சர்வதேச சந்தையில் மிக ஆவலோடு எதிர்பார்க்கப்படும் அப்பிள் பத்தாவது ஆண்டுவிழா செப்டம்பர் 12ம் திகதி நடைப்பெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அப்பிள் கடந்த சில ஆண்டுகளாக கட்டமைத்து வரும் புதிய வளாகத்தில் வெளியீட்டு நிகழ்வு நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ளது.

ஐபோன் 8 மட்டுமின்றி மேம்படுத்தப்பட்ட ஐபோன் 7S மற்றும் ஐபோன் 7S பிளஸ் மாடல்களையும் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இத்துடன் செல்லுலார் கனெக்டிவிட்டி கொண்ட புதிய ஆப்பிள் வாட்ச் சாதனமும் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
முந்தைய ஆண்டுகளை போன்று இல்லாமல் அப்பிள் வெளியிட இருக்கும் சாதனங்களின் டீசர் குறிப்புகளை விழா அழைப்பிதழ்களில் குறிப்பிட்டுள்ளது.
வண்ணமயமான அப்பிள் லோகோ, ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் நடைபெறும் முதல் விழாவில் சந்திப்போம். அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். என்ற தகவலுடன், விழா நடைபெறும் தேதி மற்றும் நேரம் உள்ளிட்டவை அப்பிள் அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வண்ணமயமான ஆப்பிள் லோகோ புதிய ஐபோன் பல்வேறு நிறங்களில் இருக்கும் என்பதை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. எனினும் செப்டம்பர் 12-ம் தேதி நடைபெறும் விழாவில் ஸ்பெஷல் எடிஷன் ஐபோன் வெளியிடப்படும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்த வகையில் புதிய ஐபோனின் விலை முந்தைய மாடல்களை விட அதிகமாக நிர்ணயம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
சிறப்பம்சங்களை பொருத்த வரை புதிய ஐபோனில் 5.8 இன்ச் OLED பேனல் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதேபோன்ற திரை சாம்சங் கேலக்ஸி S8 மற்றும் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட்டது. அந்த வகையில் புதிய ஐபோன் திரை அளவு தெளிவாக அறியப்படாத நிலையில், இவை திரையை சுற்றி நிச்சயம் மெல்லிய பெசல் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

ஐபோன் 8-இல் வழக்கமான ஹோம் பட்டன் நீக்கப்படும் என்றும், டச் ஐடி சார்ந்து இருவித தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒன்றில் புதிய டச் ஐடி ஐபோனின் பின்புறம் இருக்கும் ஆப்பிள் லோகோவில் வழங்கப்படலாம் என்றும், மற்றொரு தகவலில் முன்பக்கம் இருக்கும் கிளாஸ்-இன் கீழ் பொறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments