ஆப்கான் தலைநகரில் கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அருகில் உள்ள வங்கியொன்றினுள் இடம்பெற்ற தற்கொலை குண்டுதாக்குதலில் ஐவர் கொல்லப்பட்டுள்ளதுடன் எட்டு பேர் காயமடைந்துள்ளனர்
காபுல் வங்கியின் வாயிலில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
இதேவேளை தலிபான் இந்த தாக்குதலிற்கு உரிமை கோரியுள்ளதுடன் வங்கியில் காணப்பட்ட படைவீரர்கள் மற்றும் காவல்துறையினரை இலக்குவைத்ததாக குறிப்பிட்டுள்ளது
ஆப்கான் தலைநகர் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியான தற்கொலை குண்டு தாக்குதல்களை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது
இந்த வருடத்தின் முதல் அரையாண்டு பகுதியில் 299 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கியநாடுகள் தகவல்கள் தெரிவித்துள்ளன.


0 Comments