Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பில் நல்லிணக்க பாதயாத்திரை

மதங்களின் ஊடாக சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் வகையில் மாபெரும் சர்வமத பாதயாத்திரை இன்று செவ்வாய்க்கிழமை (29-08)காலை மட்டக்களப்பில் நடைபெற்றது.இலங்கை எகட் ஹரிதாஸ் தலைமையகமும் மட்டக்களப்பு எகட் ஹரித்தஸ் அமைப்பும் இணைந்து இந்த நல்லிணக்க பாதயாத்திரையினை ஏற்பாடுசெய்திருந்தது.
மட்டக்களப்பு காந்தி பூங்காவில் ஆரம்பமான இந்த பாதயாத்திரையானது மட்டக்களப்பு மாநகரசபை மண்டபம் வரையில் நடைபெற்றது.
இந்த பாதயாத்திரையில் காலி,இரத்தினபுரி,அம்பறை,மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் இருந்து வருகைதந்த இந்து,பௌத்த,இஸ்லாமிய,கிறிஸ்தவ மதங்களின் மதத்தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இலங்கையில் மதங்களிடையே ஒற்றுமையினை ஏற்படுத்துவதன் மூலம் இனங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த பாதயாத்திரை ஏற்பாடுசெய்யப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாநகரசபைக்கு பாதயாத்திரை வந்தடைந்ததும் அங்கு மத நல்லிணக்க மாநாடு நடைபெற்றது.
DSC09215DSC09225DSC09286

Post a Comment

0 Comments