Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

இலங்கையில் பொலிஸாருக்கு ஏற்படவுள்ள மாற்றம்!

இலங்கையில் பொலிஸாரின் சீருடையில் நிறம் மாற்றப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தற்பொழுது பொலிஸார் பயன்படுத்தி வரும் காக்கி நிற ஆடைகளுக்கு பதிலீடாக நீல நிற சீருடை வழங்கப்பட உள்ளது.
காக்கி நிற சீருடைகள் ஏனைய துறையினரும் பயன்படுத்தி வருவதனால் பொலிஸாரின் சீருடையை நீல நிறமாக மாற்றத் திட்டமிட்டதாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டுக்குள் பொலிஸாரின் காக்கி சீருடை நீல நிறமாக மாற்றப்படும் என அவர் கொழும்பு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
நீல நிற சீருடைகள் தைப்பதற்கான விலை மனுக் கோரல்கள் கோரப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மோட்டார் போக்குவரத்து பொலிஸாருக்கு சாரதிகளைப் போன்றே பாதசாரிகளினதும் ஒத்துழைப்பு அவசியமானது எனவும், புலனாய்வுப் பிரிவினர், விசேட அதிரடிப் படையினர் ஆகியோர் சிறந்த சேவைகளை ஆற்றி வருகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments