Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பில் தீ பரவல் -கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சி

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் கும்பைகளை கொட்டும் பகுதியில் ஏற்பட்ட தீயினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் கும்பைகளை கொட்டும் திருப்பெருந்துறை திண்ம முகாமைத்துவ நிலையத்தில் பாரிய தீ ஏற்பட்டது.
குப்பைகளை கொட்டும் பகுதியில் ஏற்பட்ட இந்த தீயினைக்கட்டுப்படுத்த மட்டக்களப்பு மாநகரசபையின் தீயணைக்கும் பிரிவு பொலிஸார் முப்படைகளும் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
குறித்த பகுதிக்கு சென்றுள்ள மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் வி.தவராஜாவின் நேரடியான பணிப்புரைகளுக்கு அமைய தொடர்ந்து தீயினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த தீ காரணமாக குறித்த பகுதியில் உள்ள பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இது ஒரு நாசகார செயற்பாடாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ள மட்டக்களப்பு பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளையும் மேற்கொண்டுவருகின்றனர்.
IMG_1505IMG_1507IMG_1512

Post a Comment

0 Comments