Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

குளிர்சாதனப் பெட்டிக்குள் ஒழிந்து உயிர் தப்பிய நடிகை

பார்சிலோனாவில் தாக்குதல் சம்பவம் நடந்தபோது, அங்கிருந்த ஒரு உணவு விடுதியின் குளிர்சாதனப் பெட்டிக்குள் ஒழிந்து கொண்டது பயங்கர அனுபவமாக இருந்தது என்று நடிகையும் நடனக் கலைஞருமான லைலா ரோஸ் கூறியுள்ளார்.
பார்சிலோனாவில் உள்ள புகழ்பெற்ற லாஸ் ராம்ப்ளாஸ் சுற்றுலா பகுதியில் கூட்டத்தில் வேன் மோதிய சம்பவத்தில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பார்சிலோனா தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.
இதற்கிடையே, இந்த தாக்குதலுக்கு ஐ.நா. சபை மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட பலர் கடும் கண்டனங்களை  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments