Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் 3 பேர் உண்ணாவிரதம்

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 3 பேர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று காலை முதல் அவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.
தங்களுக்கு எதிராக வவுனியா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை கொழும்பிற்கு மாற்ற வேண்டாம் என கோரி இவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
எனினும், நீதிமன்ற செயற்பாடுகள் குறித்து சிறைச்சாலைகள் திணைக்களத்தால் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ள முடியாது என அவர் கூறியுள்ளார்.
எனினும், தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளமை குறித்தும் அவர்களின் கோரிக்கை தொடர்பிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வவுனியாவில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களே இவ்வாறு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments