இலங்கை அணியின் சமீபத்தைய தோல்விகள் கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள அணியின் பயிற்றுவிப்பாளர் நிக் பொத்தாஸ் அணியின் விடயங்களில் பலரின் தலையீடுகள் உள்ளதே இதற்கு காரணம் என குறிப்பிட்டுள்ளார்
சமீபத்திய தோல்விகள் சீற்றமடையச்செய்துள்ளன அணியின் நிர்வாகத்தில் பலரின் தலையீடு உள்ளதே இதற்கு காரணம் என தெரிவிக்க முடியயும் என குறிப்பிடலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
நான் வீரர்களிடம் கோபப்படப்போவதில்லை,அவர்கள் மிகவும் கடுமையாக பயிற்சி எடுக்கின்றனர் முயற்சி செய்கின்றனர் அவர்களிற்கு பயிற்சி வழங்குபவர்களும் மிகுந்த ஆர்வத்துடன் பணியாற்றுகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்
நிலைமையை கட்டுப்படுத்தும் நிலையில் நாங்கள் இருந்தால் அதனை கட்டுப்படுத்தலாம் ஓரு குறிப்பிட்ட காலத்திற்குள் நிலைமையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தலாம், எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


0 Comments