Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

வளர்த்த மாடு நெஞ்சில் பாய்ந்தது! - குடும்பஸ்தர் மரணம்

வேலணை மேற்கு 5ஆம் வட்டாரத்தில், வளர்ப்பு மாடு நெஞ்சில் பாய்ந்ததில், குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார். முனியாண்டி பொன்னையா (வயது 56) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார் என்று ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர், காளை மாடு ஒன்றை வளர்த்து வந்துள்ளார். மாட்டுக்குத் தண்ணீர் வைக்கச் சென்ற அவர் அதனை பிடித்துக் கட்டுவதற்கு முயன்றபோது, மாடு அவரைத் தாக்கியுள்ளது. இதில் படுகாயங்களுக்கு உள்ளான நபர், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும், சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் இரவு உயிரிழந்துள்ளார்.

Post a Comment

0 Comments