Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

இரசாயன பாட வினாத்தாள் வெளியானதா? : விசாரணைகள் ஆரம்பம்

க.பொ.த உயர்தரப் பரீட்சையில் இராசாயன விஞ்ஞான பாட வினாத்தாளில் காணப்பட்ட வினாக்கள் சில பரீட்சைக்கு முன்னரே வெளியாகியதா என்பது தொடர்பாக பரீட்சைகள் திணைக்களத்தினால் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் சனிக்கிழமை இரசாயன விஞ்ஞான பாட பரீட்சை நடைபெற்றுள்ளதுடன் பரீட்சை முடிவடைந்த பின்னர் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு தனியார் வகுப்புக்களை நடத்தும் ஆசிரியர் ஒருவர் தான் கருத்தரங்கில் வெளியிட்டிருந்த கேள்விகள் சில வினாத்தாளில் காணப்பட்டதாக தெரிவித்து துண்டு பிரசுரங்களை விநியோகித்த நிலையிலேயே பரீட்சைகள் திணைக்களத்தினால் இவ்வாறாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இரசாயன பாட பகுதி இரண்டு வினாத்தாளில் 3 கேள்விகள் தொடர்பாக தான் கருத்தரங்கில் ஏற்கனவே ஆராய்ந்திருந்தாகவும் அந்த கேள்விகள் வந்துள்ளதாகவும் தெரிவித்து கம்பஹா பகுதியில் பரீட்சை நிலையமொன்றுக்கு அருகில் குறித்த ஆசிரியர் துண்டு பிரசுரங்களை விநியோகித்து விளம்பரம் செய்துள்ளார்.
இந்த விடயம் மாணவர்களுக்கும் மற்றும் ஆசிரியர்களுக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியதுடன் பரீட்சைக்கு முன்னரே வினாத்தாள் வெளியாகியிருக்க வேண்டுமெனவும் இது தொடர்பாக விசாரணைகளை நடத்துமாறும் அவர்கள் பரீட்சைகள் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதேவேளை அநுராதபுரம் பகுதியில் பரீட்சை நிலையமொன்றுக்கு கொண்டு செல்லப்பட்ட இரசாயன பாட வினாத்தாள்களில் ஒரு வினாத்தாள் குறைவடைந்து காணப்பட்டுள்ளதாகவும் இதற்கும் கம்பஹா தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவரினால் துண்டுபிரசுரங்களை விநியோகித்த சம்பவத்திற்கும் இடையே தொடர்புகள் இருக்கிறதா எனவும் தாங்கள் சந்தேகிப்பதாக ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இதன்படி ஆசிரியர் சங்கங்கள் இந்த விடயம் தொடர்பாக முறையான விசாரணைகளை நடத்த வேண்டுமென பரீட்சைகள் திணைக்களத்தை வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

Post a Comment

0 Comments