மட்டு நகரில் புகழ்
பூத்த கிராமங்களில் ஒன்றாக குருக்கள்மடம் கிராமம் திகழ்கின்றது. இக்கிராமத்திற்கு தனித்துவமான கலை காலாச்சாரப் பாரம்பரியங்கள் உண்டு. அந்தவகையில் குருக்கள்மடம் ஸ்ரீ கிருஸ்ணன் கோயிலின் ஸ்தாபகராக ஸ்ரீலஸ்ரீ சோமஸ்வராந்தகிரி அவர்கள் திகழ்கின்றார். அத்துடன் ஸ்ரீ கிருஸ்ணன் கோயிலில் திருவருள் ஆண்கள் பெண்கள் சங்கங்களை ஆரம்பித்தவராகவும் இவர் காணப்படுகின்றார். ஆரம்ப காலத்தில் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் இவ்வாலயத்தை உருவாக்கிய பெருமை இவரைச் சார்கின்றது. இன்று இவ் ஆலயமானது மிக வளர்ச்சியடைந்து காணப்படுகின்றது. ஸ்ரீலஸ்ரீ சோமேஸ்வரானந்தகிரி 1977 ம் ஆண்டு சமாதி அடைந்ததாகக் கூறப்படுகின்றது. 20.08.2017 அன்று இவரின் 40 வது நினைவு தினம் ஆலய வளாகத்தில் உள்ள இவரது நினைவாலயத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வின் போது பாடல்கள், பேச்சு, இன்னும் பல நிகழ்வுகளும்
பூசையும் இடம்பெற்று, பின்னர் இறுதியாக அன்னதானமும் இடம்பெற்றது. இந்நிகழ்வுகளில் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
0 Comments