Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

யாழ்ப்பாணத்தை உலுக்கிய சோகம்!!இதுவரை 5 உடல்கள் மீட்பு

யாழ்ப்பாணம் மண்டைதீவு, சிறுதீவு கடற் பகுதியில் படகு கவிழ்ந்து உயர்தர வகுப்பு மாணவர்கள் 5பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த சடலங்களை கடற்படையினர் மற்றும் குருநகரை சேர்ந்த மீனவர்கள் கைப்பற்றியுள்ளனர்.
இவர்கள் கொக்குவில் மற்றும் உரும்பிராய் பகுதியை சேர்ந்த 18 மற்றும் 19 வயது இளைஞர்களெனவும் இன்று நடைபெற்ற உயர்தர பரீட்சையை முடித்துக்கொண்டு நண்பர்கள் குழுவாக யாழ்ப்பாணம் சிறுதீவு பகுதியில் தண்ணி அடித்துவிட்டு கடலுக்குள் இறங்கிய போதே இந்த கோர நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
பாதுகாப்பற்ற முறையில் கடற்கரையில் கட்டப்பட்டிருந்த படகொன்றின் கயிற்றை அவிட்டு காற்றின் முகப்பில் ஓடவிட்டுள்ளனர்.
இதன்போது எந்தவித கடல் அனுபவமும் இல்லாத இம்மாணவர்கள் படகு ஆழத்திற்கு சென்றதும் பீதியடைந்து படகில் அங்குமிங்கும் இடம்மாறியதாலேயே படகு கவின்றதாக நேரில் பார்த்தோர் தெரிவிக்கின்றனர்.
யாழ் வைத்தீஸ்வரா கல்லூரி, கொக்குவில் இந்துக்கல்லூரியை சேர்ந்த மாணவர்களின் உயிரிழந்த சடலங்களே கைப்பற்றப்பட்டுள்ளன.
எத்தனை பேர் கடலுக்குள் இன்னமும் இருக்கிறார்களென்ற சரியான தகவலை பெற முடியவில்லை.உயிர்தப்பிய மாணவர்கள் பய பீதியுடனும் கவலையுடனும் காணப்படுகின்றனர்.
இதனால் உண்மைத்தகவலை பெற்றுக்கொள்வதில் எமது லவ்சிறி.கொம் செய்தியாளர்கள் சிக்கலை எதிர்நோக்கியுள்ளனர்.
குறித்த சோகமான சம்பவம் இடம்பெற்ற இடத்தில் பொதுமக்கள் பெருமளவு குவிந்துள்ளனர். யாழ் பிராந்திய பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டவண்ணமுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.(15)
10956-2-626b9246caa10f2e0cad1c3ecc9f78792

Post a Comment

0 Comments