Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

தமிழரசுக் கட்சியில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன

இலங்கை தமிழரசுக் கட்சியின் கட்டமைப்பை மாற்றியமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கட்சியின் உயர்மட்டம் இதற்கான பணிகளை முன்னெடுத்து வருகிறது.
உள்ளூர், பிராந்தியம் மற்றும் சர்வதேச செயன்முறைகளுக்கு ஏற்ப கட்சியின் செயற்பாட்டை மாற்றியமைக்க வேண்டிய நிலையிலேயே இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக இந்திய செய்திச்சேவை ஒன்று கூறுகிறது.
வரப்போகும் வடமாகாணசபை தேர்தலை சந்திக்கும் வகையில் இந்த முயற்சிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதன்படி தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்காக செயற்படும் அதேநேரம் பொருளாதார அபிவிருத்தியை முன்னெடுக்கும் செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.
வடமாகாண சபையை தமிழரசுக் கட்சி கைப்பற்றிய போதும் அங்கு அரசியல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
எனினும் பொருளாதார அபிவிருத்தி மற்றும் மாகாணத்தின் நிர்வாக கட்டமைப்பு விடயங்களில் அந்த மாகாணசபை தோல்வி கண்டுள்ளதாக பலரும் குற்றம் சுமத்துகின்றனர்.
இதில் இருந்து மீளும் முகமாகவே தமிழரசுக் கட்சியின் செப்பனிடல் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

Post a Comment

0 Comments