அமெரிக்கா - மெக்சிகோ வலைகுடா கடலில் ‘ஹஸ்லே’ எனும் அதிபயங்கர புயல் 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது உருவாகியுள்ளது.
இந்த புயல் காரணமாக வழமைக்கு மாறாக கடலின் நீர்மட்டம் 12 அடி உயர்ந்துள்ளதுடன், டெக்சாஸ், லூசியானா மற்றும் வடக்கு மெக்சிகோ பகுதிகளில் காற்றுடன் கூடிய கடும் மழை பெய்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொடர்ந்தும் இங்கு 97 சென்றீ மீட்டர் மழை பெய்தனால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் டெக்சாஸ் தென் கடலோர பகுதி பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கடலோரம் தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், லூசியானா மற்றும் டெக்சாஸ் மாகாணங்களில் பேரிடர் அமைக்கப்பட்டுள்ளது. ஹார்வி’ புயல் இன்று அல்லது நாளை அதிகாலை கரையை கடக்கும் எதிரிபார்க்கப்படுகின்றதாக கூறப்படுகிறது.
புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 201 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் கடும் மழையும் வெள்ள அபாயமும் ஏற்படுமென எச்சரிக்கப்படுகின்றது.
அதிக எண்ணை வளம் மிக்க அமெரிக்காவின் மெக்சிகோ வலைகுடா பகுதியில் தற்போது ஹார்வி புயல் காரணமாக கார்பஸ் கிருஸ்டி முதல் டெக்சாஸ் வரையுள்ள எண்ணை சுத்திகரிப்பு ஆலைகள் மூடப்பட்டன.
அதனால் எண்ணை உற்பத்தியும், இயற்கை எரிவாயு உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கடந்த 2005 ஆம் ஆண்டு புளோரிடாவை வில்மா புயல் தாக்கத்தினை தொடர்ந்து 12 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் புயல் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


0 Comments