Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

உலகின் மிகச் சவாலான ரயில் பாதை: கோடிக்கணக்கான ரூபாய் செலவில் அமைக்கிறது சீனா

சீனா- திபெத் இடையே, மிகவும் சவாலான ரயில் பாதையை அமைக்கிறது சீனா.
பொருளாதார வளர்ச்சியிலிருந்து தொழில்நுட்ப வளர்ச்சி வரை, உலக நாடுகளுக்குக் கடும் சவால் விடும் நாடு, சீனா. தற்போது, ரயில்வே துறையில் சர்வதேச அளவில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தத் தயாராகிக்கொண்டிருக்கிறது. உலகின் அதிவேக ரயில்களைக்கொண்ட சீனா, தற்போது உலகின் மிகச் சவாலான ரயில் பாதையை அமைத்துவருகிறது.
திபெத் பகுதிகளில் அதள பாதாளங்கள் நிறைந்த சிச்சுவாந் திபெத் வழித்தடத்தில், ரயில் பாதை அமைக்கும் பணியை சீனா மேற்கொண்டு வருகிறது. தார்ச்சாலை அமைப்பதே சவாலாக உள்ள வழித்தடத்தில், சுமார் 3,600 கோடி ரூபாய் திட்டத்தில் ரயில் பாதை அமைத்துவரும் சீனப் பொறியாளர்கள், சர்வதேச தொழில்நுட்பங்களையும் மீறிய திட்டங்களால், இதை சாத்தியப்படுத்திவருகின்றனர். 1,700 கி.மீ. தொலைவுகொண்ட இந்த ரயில் பாதை அமைக்கப்பட்டால், சீனாவால் திபெத் பகுதியில் அமைக்கப்படும் இரண்டாவது ரயில் பாதை  இதுவே ஆகும்

Post a Comment

0 Comments