Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மயிலிட்டியை மீட்க நாளை போராட்டத்துக்கு அழைப்பு!

மயிலிட்டியில் எஞ்சிய நிலத்தையும் மீட்க ஆதரவு தெரிவிக்குமாறு மயிலிட்டி மீள்குடியேற்றக் குழு மற்றும் வலி.வடக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வுச் சங்கத்தின் தலைவர் அ.குணபாலசிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மயிலிட்டித்துறை மற்றும் அதனோடு இணைந்த நிலப்பரப்பு நாளை பாதுகாப்புத் தரப்பினரால் மாவட்டச் செயலாளரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
   
இந்த நிலையில், மயிலிட்டி - நலன்புரி நிலையங்களிலுள்ள மக்கள் அனைவரையும் நாளை காலை 9 மணிக்கு முன்னதாக மயிலிட்டித்துறையில் ஒன்று கூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாளை காலை 7 மணிக்கு, பருத்தித்துறையிலுள்ள மயிலிட்டி கடற்தொழில் சங்கத்திலிருந்து இலவச பஸ் சேவை மயிலிட்டித்துறைக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments