இந்தோனேசியாவில் ஹெலிகாப்டர் மலையில் மோதி நொறுங்கியதில் 8 பேர் பலியாகினர். விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்தோனேசியாவில் மத்திய ஜாவா மாகாணத்தில் தமாக்கங்க் மாவட்டத்தில் உள்ள எரிமலை நேற்று(02) திடீரென வெடித்து சிதறியது. அதில் 10 பேர் காயம் அடைந்தனர்.
எனவே எரிமலை வெடித்த பகுதியில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் கடற்படை ஹெலிகாப்டர் ஈடுபடுத்தப்பட்டது. நேற்று அந்த ஹெலிகாப்டர் ஜாவா தீவுக்கு சென்று பாதிக்கப்பட்ட 4 பேரை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது.
அந்த ஹெலிகாப்டர் பிரபல சுற்றுலா தளமான டியங் பிளட்டியூ பகுதிக்கு புறப்பட்டு சென்றது. அதை சென்றடைய கூடிய 3 நிமிடத்துக்கு முன்பு அங்கிருந்த புடால் மலையில் மோதியது.
இதனால் வெடித்து சிதறிய ஹெலிகாப்டர் தீப்பந்து போன்று மலையில் விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 8 பேரும் அதே இடத்தில் பலியாகினர். அவர்களில் 4 பேர் கடற்படை அதிகாரிகள். 4 பேர் மீட்கப்பட்டு அழைத்து செல்லப்பட்டவர்கள். விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


0 Comments