|
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் 18 பேர், எதிர்வரும் செப்டெம்பர் மாதம், கூட்டு அரசாங்கத்திலிருந்து விலகவுள்ளதாக, இராஜாங்க அமைச்சர் டீ.பி. ஏக்கநாயக்க, தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முடியவுள்ளதாகவும், எனவே, கூட்டு அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு, இந்த 18 பேரும் தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
|
இதன்பின்னர், 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் வரும் வரை, இவர்கள், நாடாளுமன்றத்தில் சுதந்திர உறுப்பினர்களாக செயற்படுவர் என்றும் அவர் மேலும் கூறினார்.
எவ்வாறாயினும், கூட்டு அரசாங்கத்திலிருந்து, இவர்கள் விலகவுள்ளமை குறித்து தான் அறிந்திருக்கவில்லை என்று, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். சு.க மற்றும் ஐ.தே.கவுக்கு இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை, செப்டெம்பர் 30ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்தாலும், அவ்வாறான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவில்லை என்று தெரிவித்த அவர், ஊடகங்கள் செய்தி தயாரிக்கின்றன என்றும் கூறினார்
|


0 Comments