வடக்கில் நந்திக்கடல் உள்ளிட்ட பகுதிகளில் மீன்கள் உயிரிழந்து கரையொதுங்கவதற்கான காரணத்தை கண்டறிந்துள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சு தெரிவித்துள்ளது.
வடக்கில் நிலவும் வரட்சியால் கடலுக்கும் களப்புகளுக்கும் இடையேயான தொடர்புகள் இல்லாது போய் களப்புகளில் நீர் மட்டம் குறைந்து நீர் வெப்பமாவதாலும் மற்றும் நீரில் ஒட்சிசன் குறைவடைந்துள்ளமையினாலுமே மீன்கள் இறந்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனால் மக்கள் வீணாக அச்சம் கொள்ளத் தேவையில்லையெனவும் தற்போது அங்கு மீன்கள் இறப்பது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது


0 Comments