மட்டக்களப்பு, வந்தாறுமூலை வளாகத்தில் அமைந்துள்ள நல்லையா மண்டபத்தில் முற்பகல் மற்றும் பிற்பகல் நேர அட்டவணைப்படி நான்கு அமர்வுகளாக இந்தப் பட்டமளிப்பு விழா நடைபெறும்.
மட்டக்களப்பு, வந்தாறுமூலை, திருகோணமலை ஆகிய வளாகங்களைச் சேர்ந்த உள்வாரி மற்றும் வெளிவாரி பட்டப்படிப்பைப் பூர்த்திசெய்தோர்;, இதன்போது பட்டம் பெறவுள்ளனர்.
கலை கலாசாரப்பீடம், சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானபீடம், சித்த மருத்துவ கற்கைகள் பிரிவு, வணிக முகாமைத்துவபீடம், விவசாயபீடம், தொடர்பாடல் மற்றும் வியாபாரக் கற்கைகள் பீடம், பிரயோக விஞ்ஞானபீடம், சுவாமி விபுலானந்தா அழகிய கற்கைகள் நிறுவனம் ஆகியவற்றில் பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்வர்கள் பட்டங்களைப் பெறவுள்ளனர்.
கடந்த காலத்தில் இரண்டு நாட்கள் பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு முதல் பட்டமளிப்பு விழா ஒரே நாளில் 4 அமர்வுகளாக நடத்தப்பட்டு வருகின்றது.


0 Comments