மட்டு மாநகரின் தெற்கே அனைத்து வளங்களாலும் சிறப்புற்றுவிளங்குகின்ற பழம் பெரும் கிராமமாக குருக்கள்மடம் கிராமம் விளங்குகின்றது. இந்தியாவின் காஷ்மீர் பிரதேசத்தில் இருந்து வருகை தந்த வணக்கத்திற்குரிய சுவாமி ஜீ ஸ்ரீலஸ்ரீ சோமேஸ்வரானந்தகிரி அவர்களினால் ஸ்தாபிக்கப்பட்டு அடியார்களுக்கு அருள்பாலித்து வருகின்ற ஸ்ரீ கிருஸ்ணன் பெருமாளுக்கு அலங்காரத் திருவிழா நடைபெறவுள்ளது. இந்நிகழ்வானது வியாழக்கிழமை (22.06.2017) பூர்வாங்கக் கிரியைகளுடன் ஆரம்பமாகி 30.06.2017 வெள்ளிக்கிழமை சங்காபிஷேகம் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து ஆனி உத்திர நட்சத்திரத்தில் தீர்த்தோற்சவம் நடைபெற்று நிறைவு பெறவுள்ளது.
இந்நிகழ்வுகள் 19.06.2017 திங்கட்கிழமை அன்று மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் திரு.க. ஞானரெத்தினம் குருக்கள்மடம் ஸ்ரீ கிருஸ்ணன் ஆலய தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அனைவரும் வருக பெருமாள் அருள் பெறுக !
0 Comments