Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

வாக்குறுதிகளை மீறினால் ஜிஎஸ்பி சலுகை பறிபோகும்! - இலங்கைக்கு எச்சரிக்கை

இலங்கையில் பாரதூரமான மீறல்கள் இடம்பெறுமானால் ஜிஎஸ்பி வரிச்சலுகை திரும்ப பெறப்படலாம் என ஜேர்மனி தூதுவர் ஜான் ஒட்கே எச்சரித்துள்ளார். சிறுபான்மையினருக்கு எதிராக குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராக அதிகரித்துவரும் வன்செயல்கள் தொடர்பாக தாம் மிகவும் கரிசனை கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகள் தொடர்பில் நாங்கள் மிகுந்த கரிசனை கொண்டுள்ளோம். நான் அதில் பங்கேற்காத போதும் எமது கலாச்சார அலுவலகர் பங்கேற்றிருந்தார். அதனால் தான் நாம் அதில் பங்குபற்றியிருந்தோம். மதக்குழுக்கள் இனக் குழுமங்களுக்களுக்கு இடையில் வெறுப்புணர்வை உண்டுபண்ணுவதானது பிழையான வழிமுறையாகும் என்ற செய்தியை நாம் வலியுறுத்தியிருந்தோம்.
இந்தச் செய்தியை அரசாங்கத்திற்கும் மிகத் தெளிவாக நாம் வெளிப்படுத்தியுள்ளோம். அவர்கள் இது விடயத்தில் நடவடிக்கை எடுப்பதுடன் எந்த மதமாக இருப்பினும் இனமாக இருப்பினும் அதனைப் பொருட்படுத்தாது சட்டத்தின் ஆட்சியானது நடைமுறைப்படுத்தப்படவேண்டும் எனவும் குற்றமிழைத்தவர்கள் சட்டத்தின் முன்னர் நிறுத்தப்படவேண்டும் எனவும் அழுத்திக்கூறியுள்ளோம். அதுதான் பிரதானமான செய்தியாகும்.
ஜிஎஸ்பி பிளஸ் என்பது ஐரோப்பிய ஒன்றியத்தால் வழங்கப்படும் ஒருதலைப்பட்சமான வரிச்சலுகையாகும். நாங்கள் கொடுக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை.இது தாராளமனத்துடனான சலுகையாகும். இந்த தாராளச் சலுகையிலிருந்து லாபத்தை பெற்றுகொள்ள வேண்டுமாயின் குறித்த நாடு ஐநாவில் கைச்சாத்திட்டுள்ள சாசனங்களுடன் இணங்கிச் செல்லவேண்டும். நீங்கள் கையொப்பமிட்டதையே நடைமுறைக்கிடவேண்டும். பாரதூரமான மீறல்கள் இடம்பெறமானால் அது திரும்ப பெறப்படலாம் இது ஒருமுறை இலங்கைக்கு நடந்துள்ளது. இந்த நிலையில் அதனை நான் காணவில்லை. ஆனால் அரசாங்கமானது அது வழங்கிய சொந்த வாக்குறுதிகளை மிகவும் கடுமையாக நடைமுறைப்படுத்தியாக வேண்டும். எதிர்காலம் தொடர்பாக அனுமானிக்க நான் விரும்பவில்லை.
எனினும் ஜிஎஸ்பி பிளஸை வழங்குவதற்காக விதிக்கப்பட்ட நிபந்தனைகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டுமென்பதே எனது நிலைப்பாடு. நீங்கள் மாற்றங்களை நடைமுறைப்படுத்தியாக வேண்டும்அது தெளிவான செய்தியாகும்" என்று குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments