Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ஐசிசி சம்பியன்சிப் தொடரில் பிரகாசிக்க கூடிய வீரர்கள்

பாபர் அசாம் – பாக்கிஸ்தான்
வயது 22- வலதுகைதுடுப்பாட்ட வீரர்-
பாக்கிஸ்தானின் துடுப்பாட்ட வீரர்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை தனது உற்பத்தியை நிறுத்திவிட்டது போல தோற்றமளிக்கின்றது.இன்சமாம், மிஸ்பா- யூனிஸ்கான் போன்ற நடுவரிசை வீரர்களை அது உருவாக்கி பல வருடங்களாகின்றது. பல புதுவீரர்கள் அறிமுகமான கையோடு காணமற்போயுள்ளனர்
ஆனால் பாபர் அசாமில் அவர்கள் புதிய நம்பிக்கையை கண்டுள்ளனர்.22 வயதான அவரிடம் ஓரு நாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவதற்கான பல திறமைகள் காணப்படுகின்றன.அவர் முதிர்ச்சியுள்ள வீரராகவும் நவீன கால வீரர்போல வேகமாக ஓட்டங்களை பெறக்கூடியவராகவும் காணப்படுகின்றார்.இளம் பாக்கிஸ்தான் வீரர்கள் மத்தியில் காணமுடியாத விடயம் இது.
கடந்த வருடம் மேற்கிந்திய அணிக்கு எதிராக மூன்று ஓருநாள் சதங்களை தொடர்ச்சியாக பெற்றதன் மூலம் அவர் கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்தார்.அவுஸ்திரேலியாவிற்கு எதிராகவும் சிறப்பாக விளையாடினார்.
தனது கிரிக்கெட் வாழ்க்கையில் முதல்மிகப்பெரிய சர்வதேச தொடரில் விளையாடவுள்ள அவர் தன்னை நிச்சயம் நிரூபிக்க முயல்வார்.

Post a Comment

0 Comments