Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

யாழ்.பொது நூலகம், சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களால் எரித்து அழிக்கப்பட்டு ஆண்டுகள் 38

தமிழினத்தின் வரலாற்றுப் பதிவுகளின் ஆதாரமாக விளங்கிய , யாழ்.பொது நூலகம், சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களால் எரித்து அழிக்கப்பட்டு இன்றுடன் ஆண்டுகள் 38 நிறைவடைந்துள்ளன. தெற்காசியாவின் மாபெரும் அறிவுக்களஞ்சியமாக திகழ்ந்த யாழ்.பொது நூலகம், கடந்த 1981ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் எரியூட்டப்பட்டது.
சிங்கள பௌத்த பேரினவாத வன்முறைக்கு, யாழ். பொது நூலகத்தின் சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான அரிய நூல்கள் இரையாகி, தமிழர்களின் வரலாற்றில் மறக்கமுடியாத சின்னமாக மாறிவிட்டது. அக்காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த அச்சுப் பதிப்புகளுக்கு பெரும் அச்சுறுத்தல் காணப்பட்ட நிலையில், தமிழினத்தை கருவறுக்க மேற்கொண்ட திட்டமிட்ட நாசகார செயலாகவே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
1933ஆம் அண்டு தனி நபர்களால் சிறியளவிலான புத்தகங்களை கொண்டு கட்டியெழுப்பப்பட்ட யாழ். பொது நூலகம் பிற்காலத்தில் பரந்து விரிந்து ஆயிரக்கணக்கான நூல்களையும், யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த பத்திரிகைகளின் மூலப்பிரதிகளையும், பழங்காலத்து ஓலைச்சுவடிகளையும், இன்னும் பல அரிய படைப்புக்களையும் தாங்கி ஒரு முழுமையான நூலகமாக உருப்பெற்றது. 1959ஆம் ஆண்டு நூலகத்தின் முதலாவது கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.
தமிழை மட்டுமன்றி தமிழினத்தின் பெருமையையும் உலகிற்கு அடையாளப்படுத்தும் பொக்கிஷமாக காணப்பட்ட இந் நூலகத்தை வேரோடு அழித்தமை, ஒவ்வொரு தமிழரின் நெஞ்சையும் உலுக்கியது. காரணம் தமிழினத்தின் வேர் ஒவ்வொன்றாக அறுக்கப்பட்டு வந்த போதும், அறுக்க முடியாத ஆணி வேராய் காணப்பட்ட கல்வியை தமிழ் மக்களிடம் இருந்து பிடிங்குவதை அப்போதைய அரசாங்கம் குறியாக கொண்டு இந்த வேலையை திட்டமிட்டு செய்தது.
தற்காலத்தில் யாழ். பொது நூலகம் மீள கட்டியெழுப்பப்பட்ட போதிலும் அரிய ஆவணங்கள் அழிந்து போக, பிற்காலத்தில் வந்த புத்தகங்களை கொண்டு தற்போது மீண்டும் செயற்பட்டு வருகின்றது. இதுபோன்றதொரு நாசகார செயல் இனியும் வந்துவிட கூடாதென்ற நோக்கத்தல் கடந்த 2005ஆம் அண்டு மின் நூலகம் ஒன்று உருவாக்கப்பட்டு சுமார் 150,000 நூல்கள் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.(15)jaffna-pulic-library-burnt-4jaffna-pulic-library-burnt-6

Post a Comment

0 Comments