வடக்கு - கிழக்கு மாகாணங்களை ஊடறுத்து நிர்மாணிக்கப்படவுள்ள அதிவேக நெடுஞ்சாலைக்கு இந்தியா உதவும் என்றும், அதற்கான யோசனையொன்று இந்தியாவினால் கையளிக்கப்பட்டுள்ளது என்றும் உயர்கல்வி மற்றும் நெஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். கண்டியில், நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
|
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நோர்வூட் நகரில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போது, மலையக மக்களின் வீட்டுப்பிரச்சினைக்கு தீர்வாக மேலும் 10 ஆயிரம் வீடுகளை, இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் கட்டித்தருவதாக உறுதியளித்தார். அத்துடன், 1990 அம்புலன்ஸ் வண்டி சேவையை, நாடளாவிய ரீதியில் விஸ்தரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். அவ்வாறு, இந்திய அரசாங்கத்தினால், பல்வேறான அபிவிருத்தித் திட்டங்கள் இலங்கையில் முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்நிலையிலேயே, மன்னார், யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு ஊடாக அம்பாறைக்கு அதிவேக நெடுஞ்சாலையை அமைப்பதற்கான யோசனையொன்றும் இந்திய அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ளது என்றார்.
|
Home »
எமது பகுதிச் செய்திகள்
» யாழ்ப்பாணத்துடன் அம்பாறையை இணைக்கும் அதிவேக நெடுஞ்சாலை! - இந்தியா திட்டம் [Monday 2017-05-15 07:00]
யாழ்ப்பாணத்துடன் அம்பாறையை இணைக்கும் அதிவேக நெடுஞ்சாலை! - இந்தியா திட்டம் [Monday 2017-05-15 07:00]
Labels:
எமது பகுதிச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: