பிரித்தானியாவின் மான்செஸ்டர் பகுதியில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் தீவிரவாதி பயன்படுத்திய வெடிகுண்டு தொடர்பான புகைப்படங்கள் கசிந்துள்ளன.
பிரித்தானியாவின் மான்செஸ்டர் பகுதியில் நடந்த இசைநிகழ்ச்சியின் போது, Salman Abedi(22) என்ற தீவிரவாதி நடத்திய தற்கொலை வெடிகுண்டு தாக்குதலால், 22 பேர் பலியாகியுள்ளனர். 59-பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக பிரித்தானியாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இராணுவ வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது வரை 7-பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் Salman Abedi-யின் தந்தை மற்றும் சகோதரரும் அடங்குவர்.
இந்நிலையில் Salman Abedi இத்தாக்குதலுக்கு பயன்படுத்திய வெடிகுண்டு மற்றும் அது தொடர்பான புகைப்படங்களை அமெரிக்க புலனாய்வுத்துறையினர் கசியவிட்டுள்ளனர்.
இந்த புகைப்படங்களை அமெரிக்காவின் பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ளது.
இச்சம்வம் தொடர்பாக பிரித்தானியா பொலிசார் மற்றும் அதிகாரிகள் ரகசியமாக மேற்கொண்டு வரும் நிலையில், அமெரிக்க புலானாய்வுத்துறை இந்த புகைப்படங்களை கசியவிட்டுள்ளது.
அதுமட்டுமின்றி தாக்குதலில் ஈடுபட்ட Salman Abedi-யின் புகைப்படமும் முதன் முதலில் அமெரிக்க ஊடகங்களில் தான் வெளிவந்தாகவும், இதற்கும் அதிகாரிகள் தான் காரணம் என்று கூறிவந்த நிலையில், மீண்டும் வெடிகுண்டு தொடர்பான புகைப்படங்கள் கசிந்துள்ளது. அவர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இதில் வெடிகுண்டை வைப்பதற்கு Salman Abedi புளூ நிறம் மற்றும் கருப்பு நிறம் கலந்த எடை குறைவான பையை பயன்படுத்தியுள்ளான்.
அதைத் தொடர்ந்து Detonator என்றழைகப்படும் உபகரணத்தையும் அவன் பயன்படுத்தியுள்ளான். Detonator -ஐ அவன் இடது கையில் தான் பயன்படுத்தி இருக்க வேண்டும் கருதப்படுகிறது.
மேலும் அந்த குண்டின் உள்ளே போல்ட் மற்றும் ஆணிகள் போன்றவை இருந்துள்ளது. Detonator முழுவதும் இரத்தம் படிந்த நிலையில் இருந்துள்ளது. இந்த வெடிகுண்டில் 12-வோல்ட் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து தீவிரவாதியான Salman Abedi மான்செஸ்டரில் உள்ள Arndale மாலில் பை வாங்குவதற்கு சென்றுள்ளார்.
இது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.
0 comments: