அடுத்து வரும் இரு வாரங்களில் கடுமையான மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் 25ம் திகதியின் பின்னர் பருவப் பெயர்ச்சி மழை பெய்யும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
அதுவரையில் தற்போது நாட்டின் பல பகுதிகளில் நிலவி வரும் வறட்சியான காலநிலை நீடிக்கும் எனவும், சிறியளவில் சில பகுதிகளில் மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடைக்கிடையில் ஐஸ் கட்டி மழை எதிர்பார்க்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்று நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் வேளையில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது
0 comments: