Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

பாலமீன்மடு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயம்

மட்டக்களப்பு பாலமீன்மடு பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.முச்சக்கர வண்டியொன்று வேக கட்டுப்பாட்டை இழந்து மின்சார தூணில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் பயணம் செய்த ஒருவரும் சாரதியும் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஓட்டமாவடியில் இருந்து மட்டக்களப்பு பாலமீன்மடுவில் உள்ள வெளிச்சவீட்டினை பார்வையிடச்சென்றவர்களே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளனர்.இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
IMG_4910

Post a Comment

0 Comments