யுத்த காலத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்த வெளிநாட்டு நீதிபதிகளின் உதவிகளை பெற்றுக்கொள்வதில் பிரச்சினைகள் கிடையாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை வெளிநாட்டு நீதிபதிகள் அவசியமென தமிழ் மக்கள் முன்வைக்கும் கோரிக்கை நியாயமானதே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்
0 Comments