இன்று 10ஆம் திகதியும் நாளை 11ஆம் திகதியும் நாடுபூராகவுமுள்ள மதுபான சாலைகள் மூடப்பட்டிருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 7ஆம் திகதிமுதல் எதிர்வரும் 13ஆம் திகதி வரையான காலப்பகுதி தேசிய வெசாக் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் எத்தனை நாட்களுக்கு மதுபான சாலைகளை மூடுவது என ஆராயப்பட்டு வந்தன. இந்நிலையில் இன்றும் நாளையும் அவற்றை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை தேசிய வெசாக் வார காலப்பகுதியில் நாடுபூராகவும் இறைச்சிக் கடைகள் , விலங்குகள் இறைச்சிக்காக கொல்லப்படும் இடங்கள் , கெசினோக்கள் ஆகியன மூடப்பட்டிருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments