Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஒத்திகையில் ஈடுபட்ட ஹெலிகளால் ஹட்டனில் வீடுகள் பலவற்றுக்கு சேதம்

இந்திய பிரதமரின் மலையக விஜயத்தை முன்னிட்டு ஹட்டன் டன்பார் விளையாட்டு மைதானத்தில் பாதுகாப்பு ஒத்திகை நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய ஹெலிகப்டர்களால் ஐந்து வீடுகள் சேதமாகியுள்ளதாக ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்பட்டுள்ளது.
இந்திய உலங்கு வானூர்தியினால் இரண்டு பரிட்சார்த்த நடவடிக்கையின் போதே டன்பார் மைதானத்தை சுற்றியுள்ள குடியிருப்புகள் 5 ன் கூரைகள் சேதமாகியுள்ளதாக குடியிருப்பாளர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
அதிக வலுவுடையை குறித்த உலங்கு வானூர்தியின் விசிறியின் அதிக காற்று வீசியதாலே குடியிருப்பின் கூரைப் பகுதிகள் காற்றில் அள்ளுண்டுள்ளது.
உலங்கு வானூர்தி அதிக வலுகொண்டதானால் தரையிறங்கும் போது அதிக காற்று ஏற்படும் என்றும் விளையாட்டு மைதானத்தை சூழவுள்ள குடியிருப்புகளின் கூரைகளில் மணல் மூடைகளை வைக்குமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். -(3)18301318_1449912898363316_1152637417376331496_n447088629helicopp-FF

Post a Comment

0 Comments