இந்த வருட ஐஎபில் தொடரே தனது மோசமான ஐபிஎல் என அவுஸ்திரேலியாவின் முன்னாள் சகலதுறை வீரர் சேன் வட்சன் தெரிவித்துள்ளார்
பெங்களுர் அணிக்காக ஏழு போட்டிகளில் வெறுமனே 67 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுள்ள நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு வருடகாலப்பகுதியில் நான் ஐபிஎல் போட்டிகள் மூலம் கற்றுக்கொண்ட விடயங்களில் முக்கியமானது இரசிகர்கள் தங்கள் அணிக்கு எவ்வளவு தூரம் விசுவாசமாகவுள்ளனர் என்பதே – நாங்கள் சிறப்பாக விளையாடதபோதிலும் இரசிகர்கள் எங்களிற்கு தரும் ஆதரவு குறையவில்லை.
கடந்த ஒரு வருடகாலமாக சர்வதேச போட்டிகள் எதிலும் விளையாடாமல் ஐபிஎல் போட்டிகளில் விளையாட முயன்றது எனக்கு மிகவும் கடினமான சவாலாக அமைந்து விட்டது- இந்த தவறிலிருந்து நான் பாடம் கற்றுக்கொள்வேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Home »
விளையாட்டு
» இந்த வருட ஐபிஎல் தொடரே எனது மோசமான ஐபிஎல்- வட்சன்
இந்த வருட ஐபிஎல் தொடரே எனது மோசமான ஐபிஎல்- வட்சன்
Labels:
விளையாட்டு
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: