தந்தை செவ்வாவின் 40வது நினைவு தின நிகழ்வு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டக்களப்பு களுதாவளை கலாசார மண்டபத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதிக்கிளை ஏற்பாட்டில் இடம் பெற்ற வேளை நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இப்பொழுது தமிழரின் தாயகம் தமிழருக்கும் முஸ்லிம்களுக்கும் உரியது என்று தந்தை விட்டுச்சென்ற விடயத்தில் சிலர் முரண்பட்டு நின்றாலும் தற்போதைய தலைவர் சம்பந்தனும் அவர் வழியில் செயற்பட்டு வருகின்றார்.
பலதடவைகள் முஸ்லிம்களுக்கு இந்த நாட்டில் அநியாயங்கள் நடந்தபோது அதனை இந்த ஜனாதிபதியிடம் முஸ்லிம் தலைவர்களுடன் சென்று அரசுக்கு சுட்டிகாட்டியுள்ளார். இதனை பல முஸ்லிம் மக்கள் பாராட்டியும் உள்ளனர்.
அஷ்ரப் கூட தமிழர் விடுதலைக் கூட்டணி ஊடாகவே அரசியலுக்குள் பிரவேசித்திருந்தார். அவர் இறக்கும் வரை எங்களுக்கும் அவருக்கும் எந்தவித முரண்பாடுகளும் ஏற்பட்டதில்லை என மாவை சேனாதிராசா மேலும் தெரிவித்துள்ளார்.
0 Comments