Home » » கிழக்கில் முதற்கட்டமாக 1700 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள்-கிழக்கு மாகாண கல்வியமைச்சு தகவல்

கிழக்கில் முதற்கட்டமாக 1700 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள்-கிழக்கு மாகாண கல்வியமைச்சு தகவல்

கிழக்கு மாகாணத்தில் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் நடவடிக்கையில் முதற்கட்டமாக ஆயிரத்து 700 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.
இவர்களுக்கான  நியமனங்கள் எதிர்வரும் வாரங்களில் வழங்கப்படும் எனவும் கிழக்கு மாகாண சபையின் கல்வியமைச்சின் அதிகாரியொருவர் கூறினார்.
கிழக்கு முதலமைச்சர்  நசீர் அஹமட்டினால் பட்டதாரிகளுக்கான நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டதையடுத்து தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இதனைக் கூறினார்.

அத்துடன் ஏனைய பட்டதாரிகளுக்கான நியமனங்கள் கட்டம் கட்டமாக வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான நடவடிக்கைகளும் தற்போது இடம்பெற்றுவருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதனடிப்படையில் ஏனைய 3080 பட்டதாரிகளுக்கான நியமனங்களுக்கான போட்டிப் பரீட்சைகள் அடுத்த மாதம் முதலாம் வாரமளவில் இ்டம்பெறலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
கிழக்கின் நான்காயிரத்து 784 ஆசிரியர் வெற்றிடங்களுக்கு  பட்டதாரிகளைநியமிப்பதற்கு அண்மையில் தேசிய முகாமைத்துவ திணைக்களம் அனுமதி வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |