புனித ரமழான் நோன்பு காலத்தை முன்னிட்டு, அரச துறையில் பணிபுரியும் முஸ்லிம் ஊழியர்களுக்கு, விசேட விடுமுறை மற்றும் சமய வழிபாட்டு நேரங்களை ஒதுக்குமாறு, அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் ஜே. ஜே. ரத்னசிறி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான சுற்றறிக்கை ஒன்றையும், அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, நோன்பு காலப் பகுதிக்குள் அதிகாலை 3.30 மணி முதல் காலை 6 மணி வரையிலும் மாலை 3.15 மணி முதல் 4.15 மணி வரையிலும் மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் இரவு 7.30 மணி முதல் 10.30 மணி வரையிலும் நேரங்களை ஒழுங்கு செய்து கொடுக்குமாறும் தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் விசேட விடுமுறைகளை அங்கிகரிக்குமாறு அச்சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments: