Home » » காணிகள் உரி­மை­யா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­பட வேண்­டி­யது அவ­சியம்! -ஐ.நா

காணிகள் உரி­மை­யா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­பட வேண்­டி­யது அவ­சியம்! -ஐ.நா

பாதிக்­கப்­பட்ட மக்­களின் காணிகள் உரி­மை­யா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­பட வேண்­டி­யது அவ­சியம். அவ்­வாறு காணி­களை மீள வழங்க முடி­யா­விடின் காணி உரி­மை­யா­ளர்­க­ளுக்கு நட்­ட­ஈடு வழங்­கப்­பட வேண்டும். இதுவே ஐக்­கிய நாடுகள் சபையின் நிலைப்­பா­டாகும் என்று ஐக்­கிய நாடுகள் சபையின் இலங்­கைக்­கான வதி­விடப் பிர­தி­நிதி உனா­ மெக்­குலே தெரி­வித்தார்.
நல்­லி­ணக்க செயற்­பா­டு­களை அடை­யாளம் காணும் விட­யத்தில் இலங்கை அர­சாங்­கத்­துடன் ஐக்­கிய நாடுகள் சபை செயற்­பட்டு வரு­கி­றது. அந்­த­வ­கையில் நல்­லி­ணக்க செயற்­பா­டு­களில் காணி­களை விடு­விக்கும் கார­ணி­யா­னது மிகவும் முக்­கி­ய­மான ஒன்­றாகும். அதா­வது சமூ­கங்­க­ளுக்கு மத்­தியில் நம்­பிக்­கையை கட்­டி­யெ­ழுப்­பு­வதில் இந்தக் காரணி முக்­கிய பங்­காற்றும்.
எந்­த­வொரு சமூ­கத்­திலும் ஆர்ப்­பாட்டம் நடத்­து­வ­தற்­கான உரிமை உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்­பதே எனது கருத்­தாகும். இலங்­கையைப் பொறுத்­த­வ­ரையில் காணிப் பிரச்­சி­னை­யா­னது ஒரு பாரிய விவ­கா­ர­மாக காணப்­ப­டு­கி­றது. இது நீண்­ட­காலப் பிரச்­சி­னை­யாக இருக்­கின்­றது. காணி­களின் உண்­மை­யான உரி­மை­யா­ளர்கள் அவை எப்­போது தமக்கு கிடைக்கும் என்­பதை தெரிந்து கொள்­வ­தற்­கான உரி­மையை கொண்­டுள்­ளனர்.
இந்த காணி விவ­காரம் தொடர்பில் கலந்­து­ரை­யா­டல்கள் இடம்­பெ­று­வ­தாக நாங்கள் நினைக்­கின்றோம். இந்த வாரம்­கூட ஒரு கலந்­து­ரை­யாடல் இடம்­பெற்­ற­தாக அறிந்தோம். அந்த கலந்­து­ரை­யா­டல்­களின் முடி­வுகள் அல்­லது விளை­வுகள் என்­ன­வென்­பதை அறிந்து கொள்ள நாங்கள் ஆவ­லாக இருக்­கின்றோம்.
ஐக்­கிய நாடுகள் சபை இலங்கை அர­சாங்­கத்­துடன் பணி­யாற்றி வரு­கி­றது. அதா­வது நல்­லி­ணக்க செயற்­பா­டு­களை அடை­யாளம் காணும் விட­யத்தில் இலங்கை அர­சாங்­கத்­துடன் ஐக்­கிய நாடுகள் சபை செயற்­பட்டு வரு­கி­றது. நல்­லி­ணக்க செயற்­பா­டு­களில் காணி­களை விடு­விக்கும் கார­ணி­யா­னது மிகவும் முக்­கி­ய­மான ஒன்­றாகும். அதா­வது சமூ­கங்­க­ளுக்கு மத்­தியில் நம்­பிக்­கையை கட்­டி­யெ­ழுப்­பு­வதில் இது முக்­கிய பங்­காற்றும் கார­ணி­யாகும்.
காணிகள் விடு­விக்­கப்­பட்­டதும் நாங்கள் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுடன் இணைந்து செயற்­பட்டு மக்­க­ளுக்­கான தேவை­களை பூர்த்தி செய்ய நட­வ­டிக்கை எடுப்போம். அந்த மக்­களின் வாழ்க்­கையை இயல்பு நிலைக்கு கொண்­டு­வ­ரு­வ­தற்­காக அர­சாங்­கத்­துடன் இணைந்து செயற்­ப­டுவோம். காணி­களின் உரிமை தொடர்­பான செயற்­பா­டுகள் அடை­யாளம் காணப்­பட வேண்டும். அதன் பின்னர் காணிகள் உரி­மை­யா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­பட வேண்­டி­யது அவ­சியம். அல்­லது காணி உரி­மை­யா­ளர்­க­ளுக்கு நட்­ட­ஈடு வழங்­கப்­பட வேண்டும்.
உலகில் எந்த அரசாங்கமாக இருந்தாலும் காணிகள் அரச தேவைக்காக பெறப்பட்டால் அவற்றுக்கு நட்டஈடு வழங்கலாம் என்பது பெறுமதியானதொரு தர்க்கமாகும் என்றார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |