வடகொரியா அணுஆயுத தாக்குதல் நடத்தும்பட்சத்தில் தென்கொரியாவை பாதுகாக்கும்பொருட்டு அமெரிக்காவில் இருந்து கப்பல் மூலம் அங்கு கொண்டுசெல்லப்படும் சர்ச்சைக்குரிய தாட் (THAAD) என்ற ஏவுகணை எதிர்ப்பு தொகுதியை வாபஸ் பெறுமாறு சீனா இன்று புதன்கிழமை கடுமையாக எச்சரித்துள்ளது.
ஏவுகணை தாக்குதல் நடத்தப்படும் பட்சத்தில் அவற்றை நடுவானிலேயே எதிர்கொண்டு அவற்றின் வெடிக்கும் சக்தியை இல்லாமல் செல்லும் ஆற்றலை அல்லது அவற்றை நிர்மூலம் செய்யும் ஆற்றலை கொண்டது அமெரிக்கா 2008 ஆம் ஆண்டு தயாரித்த தாட் ஏவுகணை எதிர்ப்பு திட்டம்.
தாட் ஏவுகணையின் சில பாகங்கள் இன்று தென்கொரியாவுக்கு கொண்டுசெல்லப்பட்டு கிராமங்கள் வழியாக கொண்டுசெல்லப்பட்டது. இதன்போது அங்கு கிராமவாசிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
தென்கொரியாவில் இன்று புதன்கிழமை தாட் ஏவுகணை தொகுதியின் ஒரு பகுதி கொண்டுசெல்லப்படும் காட்சி
தென் கொரியாவில் நிறுத்தப்படும் தாட் ஏவுகணை தனது பகுதிகள் வரை பாயக்கூடிய ஆற்றல் கொண்டாடகு என்று சீனா அஞ்சுகிறது.
சீனாவின் வெளிநாட்டமைச்சர் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது கொரிய பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளையும் சீனாவின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் செயற்பாடுகளையும் அமெரிக்காவும் தென் கொரியாவும் உடனடியாக நிறுத்தவேண்டும் என்றும் தென் கொரியாவில் தாட் ஏவுகணை தொகுதியை நிறுவும் திட்டத்தை உடனடியாக அமெரிக்கா நிறுத்தி அந்த ஏவுகணை உபகரண தொகுதியை உடனடியாக வாபஸ் பெறவேண்டும் என்றும் சீனா கடுமையாக வலியுறுத்துகிறது என்று கூறினார்.
அமெரிக்காவின் யு எஸ் எஸ் வின்சன் என்ற விமானம் தாங்கி கப்பல் அமெரிக்காவில் இருந்து புறப்பட்டு ஓரிரு நாட்களில் தென் கொரியாவை அடையவிருக்கும் வேளையில் நேற்றைய தினம் வடகொரியா மிகப்பெரும் இராணுவ ஒத்திகை ஒன்றை நடத்தியது. பதிலுக்கு அமெரிக்க மற்றும் தென்கொரிய துருப்புக்களும் இராணுவ ஒத்திகை ஒன்றை நடத்தி இருக்கின்றன.
வடகொரியாவின் அணுஆயுத சோதனைகள் மற்றும் அதன் அணுஆயுத தயாரிப்புக்களை சீனா கண்டித்துவந்தாலும் வடகொரியாவின் ஒரே பிரதான நட்பு நாடாக சீனா திகழ்கின்றது. வடகொரியா இனிமேலும் அணு ஆயுத சோதனையை நடத்தினால் அதனுடனான தனது நட்பு மீளவும் திரும்பமுடியாதவகையில் பாதிக்கபப்டும் என்று நேற்று எச்சரித்துள்ளது.
0 Comments