Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீ கிருஸ்ணன் கோயில் புனராவர்த்தன மகாதூபி கும்பாவிஷேகம் கோலாகலம்... !!!!!! கருடன் ஆலய வளாகத்தை வானில் வலம் வந்து ஆசீர்வாதம்

ஆண்மா லகிக்கின்ற இடமே ஆலயமெனப்படுகின்றது. ஆலயம் அனைவருக்கும் பொதுவானது இந்து தத்துவத்தின் படி பல தெய்வக் கோட்பாடுகள் ஒருதெய்வக் கோட்பாடு என்பன காணப்படுகின்றன.  இதிகாசம் வாழ்க்கைக்கு வழிகாட்டுகின்றது. மகாபாரதத்தில் இருந்து பல கருத்துக்கள் மக்களுக்கு நல்வழிகாட்டுவதற்காக எடுத்துக்கூறப்பட்டுள்ளது.  இதில் கிருஸ்ண பகவானின் கீதா உபதேசம் பல கருத்துக்களை மக்களுக்கு எடுத்துக்கூறுகின்றமை குறிப்பிட்தக்கது. மதங்கள் நல்வழிகாட்டுவதாகவே இருக்க வேண்டும் மதம் என்ற போர்வையில் அதர்மச் செயற்பாடுகள் ஏற்புடையதல்ல. வாழ்கின்ற காலம் குறுகியது எனவே வாழ்க்கையில் நன்மை செய்யாது விடினும் தீமையாவது செய்யாமல் இருக்க வேண்டும். 


    இதற்கமைய மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீ கிருஸ்ணன் ஆலயமானது  இந்தியாவில் இருந்து வருகை தந்த வணக்கத்துக்குரிய சுவாமிஜி ஸ்ரீலஸ்ரீ சோமேஸ்வரானந்தகிரி அவர்களால் 1940ம் ஆண்டு  குருக்கள்மடம் பதியில் ஸ்தாபிக்கப்பட்டது. ஓர் ஆலயத்திற்கு கலசம் என்பது மிக முக்கியமானது இதில் பல விஞ்ஞானக் கருத்துக்கள் பொதிந்துள்ளன. எனவே ஆகமத்தின் படியும் இதில் உடைவுகளோ வேறு சேதங்களோ உள்ளமை ஏற்புடையதல்ல. மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீ கிருஸ்ணன் ஆலயத்துக்கு ஒருவருடத்துக்கு முன் கும்பாவிஷேகம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.  கும்பாவிசேகத்தின் போது எடுக்கப்பட்ட நிழற்படங்கள் மூலமாக அதில் அந்நேரமே உடைவு இருந்தமை கும்பாவிஷேகத்தை (பழைய நிருவாகம்) நடத்தியவர்களால் எடுக்கப்பட்ட நிழற்படங்கள் மூலமாக அவதானிக்கப்பட்டது.  இந்த உடைவினை மறைப்பதற்கு பல்வேறு  பொய்ப்பிரச்சாரங்களும் வதந்திகளும் சிலரால் ஏற்படுத்தப்பட்டன.  இதனைச் சீர் செய்யும் நோக்குடன் குருக்கள்மடம் ஸ்ரீ கிருஸ்ணன்   இயங்கு நிலையில் உள்ள ஆலய தலைவர் உறுப்பினர்கள்  இந்துக் குருமார் ஒன்றியத்தினை அணுகி இது தொடர்பாக உண்மை நிலையினை கண்டறிந்தனர். அதற்கமைய இதற்கு பிரிகாரம் செய்வதற்கு  புனராவர்த்தன மகாதூபி கும்பாபிஷேகம் ஒன்றினை நடத்துவதற்கு ஆலோசனை வழங்கப்பட்டது. இதனை குழப்புவதற்கு பல முயற்சிகள் இடம்பெற்றன. இருந்தும் பகவானின் அருளால் நாள் குறிக்கப்பட்டு இன்று 5.4.2017 அன்று மகாதூபி கும்பாவிஷேகம் நிறைவு பெற்றமை குறிப்பிடத்தக்கது.













அந்த வகையில் இந்நிகழ்வானது பல சோடனை, அலங்காரங்கள் ஆலயத்தில் செய்யப்பட்டு மிகச்சிறப்பாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.  3.4.2017 கிரியைகள் ஆரம்பித்து 5.4.2017 அன்று இந்நிகழ்வு பகவானின் ஆசிர்வாதத்தோடு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இதற்கு எடுத்துக்காட்டாக  புனராவர்த்தன மகாதூபி கும்பாவிசேகம் ஆலயத்தில் நடைபெறும் போது ஆலயத்தின் கருவறை வளாகத்தில் கருடன் வானில் வலம் வந்தமை பக்தர்களால் அவதானிக்கப்பட்டதாக எமக்கு தெரிவிக்கப்படுகின்றது. இந்நிகழ்வானது  பகவானின் ஆசீர்வாதத்தோடு  (புனராவர்த்தன மகாதூபி கும்பாவிஷேகம்)  இடம் பெற்றமைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். 































இந்நிகழ்வினை மிகச் சிறப்பாக செய்து முடித்த சிவசிறி.சி.சாந்தரூபன் குருக்கள் அவர்களுக்கு கிரியா சிரோண்மணி சிவசிறி ச.மயூரவதனக் குருக்கள்  அவர்களுக்கு வித்தியா சிரோண்மணி சிவசிறி கலாகரன் ஐயா அவர்களுக்கு வேதபாராயண சிரோண்மணி சிவசிறி பு.சிந்துஸன் ஐயா அவர்களுக்கு வித்தியா தீபம்      ஆகிய பட்டங்கள் வழங்கப்பட்டன. அத்துடன் பொன்னாடைகளும் போர்த்தி குருமார்கள் கௌரவிக்கப்பட்டனர். அதன் பின் அன்னதான நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. 

                                                                                       கீதாசாரம் 
மட்/குருக்கள்மடம், 
ஸ்ரீ கிருஸ்ணன் கோயில் ஆலய திருவருள் சங்கங்கள். 

Post a Comment

0 Comments