Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

இன்புளுவென்சா திருமலையில் மற்றுமொரு உயிரிழப்பு

நுளம்பின் மூலமாக பரவிவரும் டெங்கு நோயின் பாதிப்பினால் மனித உயிர்கள் காவுகொள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், இம்மர்ம நோய்த்தொற்றினால் மேலும் ஒருவரது உயிர் பறிக்கப்பட்டுள்ளது.
இன்புளுவென்சா எச்1 என்1 எனும் நோய்த்தொற்றாக இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படும் அடையாளங்காணப்படாத நோய்த்தொற்றின் காரணமாக திருகோணமலை பகுதியில் உயிரிழந்தவர்களது எண்ணிக்கை தற்போது மூன்றாக அதிகரித்துள்ளது.
கடந்த 12ஆம் திகதிமுதல் காய்ச்சல் மற்றும் இருமலினால் அவதியுற்றுவந்த குறித்த நபர், 15ம் திகதி திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், கடுமையான காய்ச்சல் மற்றும் இருமல் போன்ற அறிகுறிகள் தென்படின் உடனடியாக அரச மருத்துவமனையை நாடுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments