Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பெற்றோலிய ஊழியர்களின் வேலை நிறுத்தம் ஆரம்பம் : எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசையில் வாகனங்கள்

பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இதனால் நாடுபூராகவும் எரிபொருள் நிலையங்களில் கடும் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி நேற்று மாலை முதல் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பதை அவதானிக்க முடிந்ததுடன் சில இடங்களில் அந்த வரிசை கிலோமீற்றர் கணக்கில் இருப்பதையும் அவதானிக்க முடிந்தது.
தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை தமது வேலை நிறுத்தப் போராட்டம் தொடருமென அவர்கள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. -

Post a Comment

0 Comments