மட்டக்களப்பு நகரில் பெற்றோல் நிலையத்தில் ஏற்பட்ட சன கூட்டம் காரணமாக ஏற்பட்ட போக்குவரத்து இடைஞ்சல்களை பொலிஸார் சிறப்பான முறையில் சீர்செய்து போக்குவரத்துக்கு பாதிப்பு வராத வகையில் நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றனர்.பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக ஏற்பட்டுள்ள பெற்றோல் தட்டுப்பாடு ஏற்படும் என பரவிய வதந்திகள் காரணமாக பெற்றோல் நிரப்பு நிலையங்கள் நோக்கி மக்கள் படையெடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக பெருமள பொதுமக்கள் தமது வாகனங்களுடன் வீதிகளில் நிற்பதன் காரணமாக போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டுவருகின்றன.
இந்த நிலையில் மட்டக்களப்பில் மாலை வேளையில் அதிகளவு மக்கள் மட்டக்களப்பு நகரில் உள்ள பெற்றோல் நிரப்பு நிலையத்தில் கூடியதன் காரணமாக பெரும் வாகன நெரிசல் ஏற்படும் நிலைமையேற்பட்டது.
இந்த நிலையில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி மற்றும் போக்குவரத்து பொறுப்பதிகாரி ஆகியோர் நேரில் சென்று போக்குவரத்தை சீர்செய்ததன் காரணமாக போக்குவரத்துகள் சீரான முறையில் நடைபெற்றுவருகின்றன.
இதேவேளை சில பெற்றோhல் நிரப்பு நிலையங்கள் பெற்றோல் இல்லாத காரணத்தினால் வெறிசோடிய நிலையில் காண்ப்படுவதையும் காணலாம்.
0 comments: