நாட்டில் தற்போது நிலவி வரும் வெப்பமான காலநிலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை முதல் நாட்டின் அனேக பகுதிகளுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களுக்கு பிற்பகல் வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கொழும்பு முதல் காலி வரையிலான பகுதியின் கரையோரங்களில் காலை வேளையில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
0 comments: