வியட்நாமை முன்மாதிரியாக கொண்டு இலங்கையையும் விரைவான அபிவிருத்தியை நோக்கி கொண்டு செல்ல வேண்டுமெனவும் இதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் மூலம் சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
வியட்நாமுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று திங்கட்கிழமை ஹனோய் நகரிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் இந்நாட்டு பிரதமர் குயேன் சூ ஏன் – ஹுவை சந்திப்பின் போது இடம்பெற்ற இருநாடுகளுக்கிடையிலான பேச்சுவார்த்தையை தொடர்ந்து நடத்தப்பட்ட கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் பேதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது இலங்கை அமைச்சர்களான மகிந்த அமரவீர , மனோகணேசன் ,ஹரீன் பெர்ணான்டோ ஆகியோரும் கலந்துக்கொண்டிருந்தனர்.
அங்கு உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவிக்கையில்,
வியட்நாம் 30 வருடங்களுக்கு மேலாக யுத்தத்தை எதிர்கொண்ட நாடு. அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுடன் யுத்தம் செய்துள்ளது. இந்நிலையில் தமது நாட்டை பாதுகாக்க பல்வேறு துன்பங்களை எதிர்கொண்டு இன்று விரைவான பொருளாதார அபிவிருத்தியை நோக்கி பயணிக்கின்றது. எமது நாடும் 30 வருடங்களாக யுத்தத்தை எதிர்கொண்ட நாடே. நாம் வியட்நாமை பின்பற்றி விரைவான அபிவிருத்தியை நோக்கி பயணிக்க வேண்டும். எமது நாட்டு மக்களுக்கு சிறப்பான வாழ்வை பெற்றுக்கொடுப்பதே எமது நோக்கம். வியட்நாம் பிரதமரின் உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்று இங்கு வந்ததும் இது தொடர்பாக பேசவே ஆகும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கத்திற்கு இது சிறந்த வாய்ப்பே.
வியட்நாம் என்பது புதிய நாடு அல்ல. ஆனால் மறக்கப்பட்டிருந்த நாடு. சிங்கள தேராவாத பௌத்தம் உள்ளிட்ட மதங்கள் இங்கிருந்தே வந்தது. இதேவேளை வியட்நாம் , இலங்கைக்கு இடையே உள்ள பொருளாதார நடவடிக்கையை 100 கோடி டொலர் வரை அதிகரிப்பதே எமது பொருளாதார உறவுகள் முற்காலத்தில் இருந்து காணப்படுகின்றது. இதன்படி இந்த விஜயம் புதிய பாதையில் பயணிக்க புதிய ஆரம்பமாக இது அமையும். எமது அனுபவங்களின் மூலம் நாம் முன்னேறி செல்ல வேண்டும். இந்நிலையில் இருநாடுகளுக்கு இடையேயான உறவுகளை மேலும் பலப்படுத்தும் வகையில் வியட்நாம் பிரதமரை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுக்கின்றேன்.
இதேவேளை ஆசிய வலயத்தில் அமைதியை ஏற்படுத்துவதற்காக இருநாடுகளும் இணைந்து செயற்பட வேண்டும்.என அவர் தெரிவித்தார்.
0 comments: