அரசாங்கம் கோரிய காணாமல் ஆக்கப்பட்டோரின் விபரங்களை 11 நாட்கள் கடந்தும் வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் வழங்கப்படவில்லை என தெரிய வருகிறது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த 2 ஆம் திகதி வடபகுதிக்கு விஜயம் செய்த அரசரங்கத்தின் உயர்மட்ட் அமைச்சரும், இணைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன வவுனியாவில் சுழற்சி முறையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
இதன்போது அவர்களது கோரிக்கைகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் கேட்டறிந்த அமைச்சர் காணாமல் ஆக்கப்பட்டோரின் விபரங்களை வடமாகாண சுகாதார அமைச்சர் ஊடாக தன்னிடம் வழங்குமாறும் தான் உரிய அதிகாரிகளுடன் இது தொடர்பில் பேசி அவர்கள் எங்கு இருக்கிறார்கள்…?, அவர்களுக்கு என்ன நடந்தது…? போன்ற விடயங்களினை ஒரு மாத காலத்திற்குள் தெரியப்படுத்துவதாகவும் வாக்குறுதியளித்திருந்தார்.
இதன்போது வவுனியாவில் சுழற்சி முறையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி கா.ஜெயவனிதா,
எமது மாவட்டத்தில் 1200 பேருக்கு மேல் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய விபரங்களை ஒரு வார காலத்திற்குள் வழங்குவதாக உறுதியளித்திருந்தார். ஆனால் இன்று 11 நாட்கள் கடந்தும் அவர்களுடைய எந்தவொரு விபரங்களும் வடமாகாண சுகாதார அரமைச்சரிடமோ அல்லது அரசாங்கத்திடமோ வழங்கப்படவில்லை என தெரியவருகிறது.
இதேவேளை, வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்திடம் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் முழுமையான விபரங்கள் எதுவும் இல்லாமையே இதற்கு காரணம் என தெரியவருகிறது.
0 comments: