யாழ்ப்பாணம் தட்டாதெரு மற்றும் கலட்டி பகுதியில் மோட்டார் சைக்கிளில் கையில் வாள்களுடன் நடமாடிய கும்மலினால் பதட்டம் ஏற்பட்டது.புதன்கிழமை இரவு ஏழு மணியளவில் கே.கே எஸ் வீதி தட்டாதெரு சந்தியில் மூன்று மோட்டார்சைக்கிளில் ஆறு பேர் கொண்ட குழு வாள்களுடன் நடமாடியது.எனினும் போக்குவரத்து பொலிஸார் இப்பகுதிக்கு வந்ததால் அசம்பாவிதகள் எதுவும் ஏற்படவில்லை.
சட்ட விரோத மற்றும் குற்றசெயல்களில் ஈடுபடுபவர்கள் கைதுகள் தொடர்கின்ற நிலையிலும் சமூக விரோத கும்பல்கள் எதுவித பயமுமின்றி சுகந்திரமாகா வாள்களுடன் நடமாடுவது குறித்து மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் பாடசாலை மாணவர்கள் உட்பட அப்பகுதியை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடப்பட்டது.
0 Comments