மட்டக்களப்பு மாவட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் விமல்ராஜ் மீதான துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபரை ஏறாவூர் பகுதியில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பணிபுரிபவர் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும், கைதுசெய்யப்பட்ட குறித்த சந்தேகநபரை களுவாஞ்சிக்குடி நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன் போது, 48 மணித்தியாலங்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
0 Comments