மட் /குருக்கள்மடம் ஸ்ரீ கிருஸ்ணன் ஆலய கலசத்தில் வெடிப்பு ......
மட்டக்களப்பு ஸ்ரீ கிருஸ்ணன் கோயில் 2016ம் ஆண்டு ஆனி உத்திரத்தில் கும்பாவிஷேகம் நடைபெற்றவேளையில் பிரதிஸ்டை செய்யப்பட்ட மூலஸ்தான கோபுர கலசத்தில் வெடிப்பு இருப்பதனை பொது மக்கள் அவதானித்துள்ளனர். கும்பாவிசேகம் நடைபெற்ற நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்பட்படங்களிலும் இவ் வெடிப்புக்கள் அவதானிக்கக் கூடிய நிலையில் உள்ளது.
இது தொடர்பாக நிருவாகத்தினர் இந்து குமார்கள் ஒன்றியத்தின் தலைவர் சிவ ஸ்ரீ சீதாராம் அவர்களிடம் செய்த முறைப்பாட்டை அடுத்து சிவஸ்ரீ சிதாராம் அவர்களும் இந்து ஒன்றியத்தின் ஆலோசகர் சிவஸ்ரீ சீதா சிவஸ்ரீ சச்சிதானந்தம் அவர்களும் 27.02.2017 ஆம் திகதி ஆலயத்திற்கு வருகைதந்து இது தொடர்பாக ஆராய்ந்தனர் அப்போது கலசத்தின் வெடிப்பு இருப்பதனை நேரடியாக அவதானித்தனர்
ஆலயத்தில் சமீபகாலமாக ஏற்படுகின்ற முரண்பாடுகளுக்கு இதுவும் ஒரு காரணமாக அமையும் எனக் குறிப்பிட்ட குருமார் கிராம மக்களிடையே நோய், பிரச்சினை, மகிழ்ச்சியின்மை என்பனவும் இதனால் ஏற்படலாம் என அச்சம் தெரிவித்ததோடு கலசத்தை மிக விரைவாக மாற்றியமைக்க வேண்டும் என நிருவாகத்தினரிடம் னேட்டுக் கொண்டனர் இதன் காரணமாக கிராமமக்களின் ஒற்றுமை கருதி இக்கலசத்தை மிக விரைவாக மாற்றுவதற்கான நடவெடிக்கைகளை நிருவாகத்தினர் மேற்கொண்டுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக அவதானிக்கையில் ஆகம விதிகளுக்கு அமைவாகவே இந்து ஆலயங்களில் சிலைகளும் கலசங்களும் பிரதிஸ்டை செய்யப்படுவது அவசியம் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமாகும். இதில் மாற்றுக் கருத்துக்கள் எதுவுமில்லை. எமது மக்களின் விருத்திக்காகவே இவ்விடயம் உடன் சீர் செய்யப்படவிருக்கின்றது. எனவே பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இவ்விடயத்தினை வெற்றிகரமாகச் செய்து முடிப்போம். இதை விடுத்து கடந்த காலங்களாக பொய்யான பிரச்சாரங்கள் பல முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இவ்விடயம் ஆரோக்கியமான விடயமாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. நியூட்டனின் மூன்றாம் விதியினை நினைவில் நிறுத்தி நலமாக வாழ்வோமாக!.
0 Comments