Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பில் இலங்கையில் முதல்தர திரையரங்கு திறந்துவைப்பு

இலங்கையிலேயே அதி சொகுசான அதிக கலையம்சம் கொண்ட திரையரங்கு ஒன்று மட்டக்களப்பில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.இலங்கையின் திரைப்படமாளிகை வரலாற்றில் அழகிய முறையிலும் குடும்பமாக இருந்து பார்க்ககூடிய வகையிலான இருக்கை வசதிகளையும் கொண்டதாக இந்த திரையரங்கு நேற்று இரவு மட்டக்களப்பு அன்னை செல்லம் திரைப்படமாளிகை என்னும் பெயரில் திறந்துவைக்கப்பட்டது.
செல்லம் திரையரங்குகளின் தலைவர் க.மோகனின் தலைமையில் நடைபெற்ற இதன் திறப்பு விழாவில் கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி பிரதம அதிதியாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன்,கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் சிறப்பு அதிதியாகவும் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் இலங்கை திரைப்படக்கூட்டுத்தாபனத்தின் பொதுமுகாமையாளர் உட்பட திரைப்படகூட்டுத்தாபன உத்தியோகத்தர்கள்,கலைஞாகள்,பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.
இலங்கையிலேயே அதிசொகுசானதாகவும் அழகிய முறையில் அமைக்கப்பட்டதாகவும் இந்த திரையரங்கு உள்ளமை குறிப்பிடத்தக்கது.
IMG_0224IMG_0244IMG_0250IMG_0256IMG_0257IMG_0259IMG_0265IMG_0272IMG_0277IMG_0278IMG_0279IMG_0285IMG_0288

Post a Comment

0 Comments