சோமாலியா கடற்பரப்பில் கடத்தப்பட்ட கப்பலில் உள்ள இலங்கையைர்கள் 8பேரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் ஆனால் கடத்தல் காரர்களினால் இதுவரை கப்பம் கோரியதாக உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லையெனவும் குறித்த கப்பலுக்கு பணியாளர்களை நியமித்த மேன்பவர் நிறுவனத்தின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அவர்கள் கப்பம் கோரினால் அதனை வழங்கி கடத்தப்பட்டவர்களை விடுவிக்க தயராகவே இருப்பதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் உரையாற்றிய குறித்த அதிகாரி அந்த கப்பலில் பணியாற்றிய 8 இலங்கையர்களில் 5 பேர் மாத்திரமே தங்கள் நிறுவனத்தின் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாகவும் ஆனால் மற்றைய மூவரும் வேறு தகுதி மூலம் சென்றவர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
குறித்த கப்பல் கடந்த ஜனவரி மாதத்தில் இலங்கையில் தற்காலிக பதிவை கொண்டிருந்தது. ஆனால் கடத்தப்படும் காலத்தில் இலங்கையில் பதிவை கொண்டிருக்கவில்லை. அத்துடன் இதனை மீனவர்கள் கடத்தினரா அல்லது கடற்கொள்ளையர்கள் கடத்தினார்களா என்பது தொடர்பாக இன்னும் தகவல் எதுவும் வெளியாகவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். -


0 Comments