கொரிய தீபகற்பத்தில் மோதல் மூளும் பட்சத்தில் வடகொரியாவை பலவீனப்படுத்தும் நோக்கத்துடன் அப்பகுதியில் அமெரிக்கா தனது பிரசன்னத்தை அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்படுவதாவது. தென்கொரியாவும் அமெரிக்காவும் இணைந்து முன்னெடுத்துள்ள கூட்டு ஓத்திகையில் பங்கெடுப்பதற்காக கொரிய கடற்பரப்பிற்கு அமெரிக்காவின் அணுவாயுத விமானதாங்கி கப்பல் யுஎஸ்எஸ் கார்ல்வின்சன் சென்றுள்ளது.குறிப்பிட்ட விமானந்தாங்கி கப்பலில் 80ற்கும் மேற்பட்;ட நவீன போர் விமானங்கள் காணப்படுகின்றன. வடகொரியாவின் ஏவுகணை பரிசோதனை மற்றும் வடகொரிய ஜனாதிபதியின் ஓன்றுவிட்ட சகோதரர் படுகொலை போன்றவற்றால் பதட்டம் ஏற்பட்டுள்ள சூழலில் இந்த ஓத்திகை இடம்பெறுகின்றது, இதேவேளை அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சனும் பிராந்தியத்திற்கான சுற்றுப்பயணமொன்றை மேற்கொண்டுள்ளார் இதேவேளை தென்கொரிய அதிகாரிகள் வடகொரியாவை பலவீனப்படுத்தும் நோக்கிலேயே அமெரிக்கா அப்பகுதியில் தனது பிரசன்னத்தை அதிகரிப்பதாக தெரிவித்துள்ளனர். வடகொரியாவிற்குள் ஊருடுவது,வடகொரியாவின் பிரதான கட்டளை தலைமையை அழிப்பது, அதன் முக்கிய இராணுவ கட்டமைப்புகளை அழிக்கும் நோக்குடன் இவ்வருடம் கொரிய தீபகற்பத்தில் பல பாரிய ஓத்திகைகள் இடம்பெறும் என தென்கொரிய அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments